அரசு ஊழியர்களுக்கு புது உத்தரவு

446
Advertisement

அரசு ஊழியர்கள் தாடியுடன்தான் அலுவலகத்துக்கு வரவேண்டும் என்று தலீபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானிலிருந்த அமெரிக்கப்படைகள் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியேறியதை அடுத்து, தலீபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர்.

தாங்கள் பொறுப்பேற்றதுமுதல் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துவரும் தலீபான்கள், பெண்கள் பள்ளிக்குச்செல்ல தடை, இசை நிகழ்ச்சி நடத்தத் தடை உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். விமானத்தில் பயணம்செய்ய ஆண் துணையின்றி வரும் பெண்களையும் திருப்பி அனுப்பிவிட்டனர்.

இந்த நிலையில், அரசு ஊழியர்கள் அனைவரும் தாடி வைத்திருக்க வேண்டும், தாடியை மழிக்கக்கூடாது, நீண்ட, தளர்வான மேலாடை மற்றும் கால்சட்டை, தொப்பி அல்லது தலைப்பாகை ஆகியவற்றைக்கொண்ட உள்ளூர் ஆடைகளை அணியவேண்டும் என்று தலீபான்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதைப் பின்பற்றாத அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளனர்.

இந்தப் புதிய உத்தரவுகளை அரசு ஊழியர்கள் பின்பற்றுகிறார்களா என்பதை அரசு அலுவலங்களுக்கு வந்து கண்காணித்துள்ளனர்.