Netflix பயனர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

290
Advertisement

திரையரங்கு செல்லும் பழக்கம் இல்லாதவர்கள், ஏன் டிவி கூட பார்க்காத மக்களையும், புதுமையான படங்கள் மற்றும் விறுவிறுப்பான சீரிஸ்கள் வழியே தன் வசப்படுத்தி வைத்துள்ள OTT தளங்களில் முன்னணி வகிப்பது Netflix.

அதிகப்படியான மக்கள் விரும்பி பார்க்கும் பிரபல படங்கள் மற்றும் சீரிஸ்களை ஒளிபரப்பும் Netflix, தற்போது பயனர்களுக்கு அசத்தலான அப்டேட் ஒன்றை அறிவித்துள்ளது. குறிப்பிட்ட titleகளுக்கு Spatial Audio சப்போர்ட் வழங்கப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.

3D தரத்தில் உள்ள Spatial ஆடியோ, பயனர்களுக்கு immersive soundscape effects உடன் மேம்படுத்தப்பட்ட சினிமா அனுபவத்தை வழங்கும் என Netflix நிறுவனம் தெரிவித்துள்ளது. அனைத்து விதமான சாதனங்களிலும் செயல்படக் கூடிய இந்த அப்டேட்  எல்லா சந்தாதாரர்களுக்கும் கிடைக்கும் என Netflix அறிவித்துள்ளது.