தேனி அருகே, ரேசன் அரிசியை மாவாக அரைத்து விற்பனை செய்த 2 அரிசி மில்லுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்….

70
Advertisement

தேனி மற்றும் உத்தமபாளையம் அருகே உள்ள கம்பம், சின்னமனூர், அணைப்பட்டி மற்றும் க.புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் மாவுமில்கள் இயங்கி வருகிறது.

இந்த மாவுமில்களில் ரேசன் அரிசியினை மாவாக அரைத்து விற்பனை செய்வதாக மாவட்ட ஆட்சித்தலைவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில், அதிகாரிகள் அப்பகுதிகளில்  ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது கக்கன்ஜி காலனி பகுதியில் செயல்பட்டு வரும் முகமதுமீரான் ரபீக் என்பவரது மாவுமில்லில் அரைத்து வைத்திருந்த 37 ரேசன் அரிசி மாவு மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் க.புதுப்பட்டி நூலகத் தெருவில்  இயங்கிவரும் சையது அலிபாத்திமா என்பவரது மாவுமில்லில் அரைத்து வைத்திருந்த 9 ரேசன் அரிசிமாவு மூட்டைகள் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து 2 மாவுமில்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.