கிருஷ்ணகிரி அருகே, தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததாதல், விவசாயி ஒருவர் தக்காளிகளை ஆற்றில் கொட்டினார்…

23
Advertisement

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இப்பகுதிகளில்  சாகுபடி செய்யப்படும் தக்காளி, சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக தக்காளி விலை கடும் சரிவை சந்தித்ததாக தெரிகிறது. ஒரு கிலோ தக்காளி 5 ரூபாய் மற்றும் 7 ரூபாய் வரை விலைபோனதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வேப்பனப்பள்ளி அருகே உள்ள பதிமடுகு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வெங்கடேசன் என்பவர், தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால் அதிருப்தி அடைந்து, சரக்கு வாகனத்தில் இருந்த சுமார் 3 டன்  தக்காளியை மார்க்கண்டேயன் நதியில் கொட்டினார்