விக்னேஷ் சிவன் இல்லாமல் தனியாக வந்த நயன்தாரா- வைரலாகும் வீடியோ

289
Advertisement

இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் கடந்த மாதம்  9-ம் தேதி  திருமணம் நடந்தது.கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்த  இருவருக்கும் திருமணம் எப்போது என்ற பெரும் எதிர்பார்ப்பு  அவர்களின் ரசிகர்கள் மத்தியில் நிலவியது.

முன்னதாக , திரைப்பட விழாக்கள் ,சுற்றுலா போன்று இடங்களுக்கு இருவரும் ஒன்றாக செல்வதே வழக்கமாக இருந்தது.அதன்பின் திருமணம் முடிந்து தற்போது தங்கள் வேலைகளில் கவனம் செலுத்திவருகின்றனர் இருவரும்.

இந்நிலையில் ஹனிமூன் முடிந்து இந்தியா திரும்பிய விக்னேஷ் சிவன் படப்பிடிப்பில் பிசியாக இருப்பதால் ,  நயன்தாரா தனது இல்லத்திற்கு கூட வராமல் நேரடியாக ஷாருக் கான் நடிக்கும் ஜவான் திரைப்படத்தில் நடிப்பதற்காக மும்பை பட பிடிப்பு தளத்திற்கு சென்றார். இந்நிலையில் மும்பை ஏர்போர்டில் தன் கணவர் விக்னேஷ் சிவன் இல்லாமல் தனியாக நடந்து வரும் நயன்தாராவின்  வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.