குடுகுடுப்பைக்காரர் குடும்பத்திலும் குணசித்திர நடிகர்

346
naruvi
Advertisement

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே இந்திரா நகரை சேர்ந்தவர் ராக்கி ஜில்லா. குடுகுடுப்பை இனத்தை சேர்ந்த இவர் தனது கல்லுரி படிப்பை முடித்து, திரைப்படம் ஒன்றில் நடித்து வந்துள்ளார் .

தவிர்க்க முடியாத காரணத்தால் இவர் நடித்த படம் வெளியாகவில்லை.

தனது மகன் நடித்த திரைப்படம் வெளிவராத, தந்தை துரைராஜ்ஜே தன் இனத்தை சேர்ந்தவர்களின் உதவியோடு நிதிதிரட்டி, நறுவி என்ற புதிய படத்தை தயாரித்துள்ளார்.

அந்த படத்தில் தனது மகனையே கதாநாயகனாக்கி வெற்றிகரமாக திரைப்படத்தை வெளியிட்டுள்ளார் .

வேலூரில் நறுவி பட வெளியீட்டை, மேல தாளத்துடன் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர் குடுகுடுப்பை இனத்தை சேர்ந்த மக்கள் .

இமான் அண்ணாச்சி, பாலு ஆனந்த் போன்ற முன்னனி நடிகர்கள் நடித்து ராஜ முரளிதரன் என்ற புதுமுக இயக்குனர் இயக்கி திரையரங்குகளில் வெளிவந்துள்ளது நறுவி திரைப்படம்.