நளினிக்கு நீதிமன்ற உத்தரவின்படி பாஸ்போர்ட் வழங்கப்பட்டது

67
Advertisement

திருச்சி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் நளினிக்கு நீதிமன்ற உத்தரவின்படி பாஸ்போர்ட் வழங்கப்பட்டது.

இலங்கை உள்நாட்டு போர் காரணமாக 1985ஆம் ஆண்டு, இலங்கையில் இருந்து தமிழகம் வந்த சாந்தி – கண்ணன் தம்பதிக்கு மண்டபம் அகதிகள் முகாமில் குழந்தை பிறந்தது. 36 ஆண்டுகள் கடந்த நிலையில், குழந்தையாக இருந்த நளினி தமிழக்தில் கல்வி படிப்பை முடித்து, திருணமும் செய்துள்ளார்.

திருச்சி இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வரும், நளினி கடந்த ஆண்டு பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்தார். ஆனால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டதால், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் நளினிக்கு பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட்டது. அதன்படி, அவருக்கு தற்போது பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement