மருந்து கேட்டு மருத்துவமனைக்கு சென்ற குரங்கு

345
Advertisement

அடிபட்ட குரங்கு ஒன்று தன குட்டியுடன் நேராக பீகாரில் உள்ள கிளினிக் ஒன்றிற்கு சென்ற வீடியோ இணையத்தில் வெளியாகி காண்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. ஷஜாமா பகுதியில் கிளினிக் நடத்தி வரும் மருத்துவர் அஹமத், திடீரென நுழைந்த குரங்கை பார்த்து முதலில் அதிர்ச்சி அடைந்தார்.

அதற்கு காயம் பட்டிருப்பட்டதை உடனடியாக புரிந்து கொண்ட அவர், குரங்கிற்கு டெட்டனஸ் ஊசி போட்டு காயத்திற்கு மருந்தும் போட்டுள்ளார். இதற்குள்ளாக செய்தியை கேள்விப்பட்டு அந்த கிளினிக் முன்பு மக்கள் அதிகமாக கூடினர்.

பின்னர், குரங்கு தொந்தரவில்லாமல் வெளியே செல்ல ஏதுவாக மக்களை கலைந்து செல்ல மக்களை கேட்டுக்கொண்டார் மருத்துவர். இந்த சுவாரஸ்யமான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.