தொல்லைகளைத் தடுக்கும் அதிசய மோதிரம் இஸ்ரேல் நாட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் நாட்டின் யவ்னே நகரில் பைசண்டைன் காலத்தைச் சேர்ந்த உலகின் மிகப்பெரிய பழமையான ஒரு ஒயின் தொழிற்சாலையை அகழ்வாராய்ச்சி செய்துகொண்டிருந்தனர். அப்போது கல்லால் அலங்கரிக்கப்பட்ட பழங்காலக் கண்கவர் தங்க மோதிரம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இது 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இது தொல்லைகளைத் தடுக்க அணியப்பட்ட மோதிரமாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மோதிரம் 5 கிராம், 11 மில்லி கிராம் எடையுள்ளது.
இந்த வகை மோதிரங்கள் ரோமானிய உலகில் பொதுவானவை. அதனால், இந்த மோதிரம் 3 ஆம் நூற்றாண்டில் யவ்னே நகரில் வாழ்ந்த ஒரு செல்வந்தருடையதாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
இஸ்ரேல் பழங்கால ஆணையத்தில் முகநூல் பக்கத்தில் இந்த விவரங்கள் பதிவிடப்பட்டுள்ளன.