பெட்ரோல் தேவையில்லை;ஒரு முறை சார்ஜ் = 270KM பயணம்

274
Advertisement

ஒரு முறை சார்ஜ் செய்தால் 270 கிலோமீட்டர் தூரம் செல்லக்கூடிய மினி கூப்பர் ஸ்பெஷல் எடிஷன் மின்சார கார், இந்தியாவில் 47 லட்ச ரூபாய்க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

10 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் மினி கூப்பர் கார் அறிமுகப்படுத்தப்பட்டது.

2 கதவுகளை கொண்ட இந்த சிறிய ரக சொகுசு கார்கள் வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் அதே ரகத்தில் மின்சார கார்களை வெளியிடப்போவதாக அந்நிறுவனம் தெரிவித்தது.

இது குறித்து அறிவிப்பு வெளியான இரண்டே மணி நேரத்தில் அனைத்து கார்களும் முன்பதிவு செய்யப்பட்டன.

Fast Charging மூலம் 36 நிமிடத்தில் 80 சதவீதம் வரை சார்ஜ் ஆகும் இவ்வகை கார்கள் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகம் வரை செல்லக்கூடும்.

தற்போது விற்பனையில் உள்ள மின்சார சொகுசு கார்களில் மிகவும் குறைந்த விலை காராக இது கருதப்படுகிறது.