எம்பிபிஎஸ்..நாடு முழுவதும் பொது கலந்தாய்வு..உரிமையை விட மாட்டோம்..எதிர்ப்போம். மா.சுப்ரமணியன்..

428
Advertisement

நாடு முழுவதும் மருத்துவக் கல்விக்கான மாணவர் சேர்க்கை 100 சதவீதம் அதாவது பொது மருத்துவ கலந்தாய்வு நடத்த தேசிய மருத்துவ கழகம் முன் வந்துள்ளது.

இதனை எதிர்த்து வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மருத்துவ படிப்புகளுக்கு பொது கலந்தாய்வு நடத்துவதற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். மாநில அரசின் உரிமைகளை விட்டுத்தர மாட்டோம் என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.

நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நாடு முழுவதும் மையப்படுத்தப்பட்ட பொது கலந்தாய்வு முறையில் கலந்தாய்வு நடத்தும் விதிமுறையை தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தமிழக கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.


இந்தியா முழுவதும் மருத்துவக் கல்வியில் ஆண்டுதோறும் ஒரு லட்சம் கல்வி இடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த நிலையில் நாடு முழுவதும் மருத்துவக் கல்விக்கான மாணவர் சேர்க்கையை 100 சதவீதம் மையப்படுத்தியது அதாவது பொது மருத்துவ கலந்தாய்வு நடத்த தேசிய மருத்துவ கழகம் முன் வந்துள்ளது. அதன்படி அரசு, தனியார் மற்றும் தன்னாட்சி மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை ஒரு கட்ட கலந்தாய்வு மூலம் நடத்த என்.எம்.சி. திட்டமிட்டு உள்ளது.

இதன் மூலம் மருத்துவக் கல்வியில் சேர மாணவர்கள் எதிர்கொள்ளும் நீண்டகால செயல்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும், மாணவர் சேர்க்கையை எளிமைப்படுத்த முடியும் என்றும் என்.எம்.சி. கருதுகிறது.