தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவத்தை நாள்தோறும் நாம் சாலைகளில் செல்லும் வழியில் பார்த்துகொண்டு இருக்கிறோம்.சிலர்,தனக்கு இருக்கும் திறமையை மற்றவர்களுக்கு காட்டவேண்டும் என்பதற்காகவே வாகனத்தை வேகமாக ஓட்டிச்செல்வர்.
இன்றைய காலகட்டத்தில்,ஆபத்தை உணராமல் பல இளைஞர்கள் பையுடன் சாகசம் செய்வது என தேவையற்ற செயல்களில் ஈடுபட்டு தன் உயிரை பறிகொடுக்கும் நிலைதான் உள்ளது.இது போன்ற செயல்களால் பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் , ஐபிஎஸ் அதிகாரி ரூபின் சர்மா தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்துவருகிறது.அதில், நபர் ஒருவர்,தன் செல்லப்பிராணியான நாய்க்கு ஹெல்மட் அணிவித்து தன் பைக்கின் பின் புறத்தில் உட்காரவைத்து அழைத்துச்செல்கிறார்.
அது ஒரு பிராணி தானே என எண்ணாமல்,பயணத்தில் அந்த நாயின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு,உரிமையாளர் செய்த இந்த செயல் இணையத்தில் பாராட்டுகளை குவித்து வருகிறது.