நீர்வீழ்ச்சி உச்சியிலிருந்து சரிந்து விழும் நபர்- பதறவைக்கும் வீடியோ

294
Advertisement

உலகில் பல வித்தியாசமான நபர்கள் உள்ளனர்.அதில் சிலர் வித்யாசமான சாகசங்கள் செய்து தன் திறமையை நிரூபிக்க முயற்சி செய்கின்றனர்.ஆனால் அணைத்து தருணமும் அவர்களுக்கு சாதகமாக அமைந்துவிடுவதில்லை.

இது போன்ற மோசமான சம்பவம் ஒன்று  சீனாவில் நிகழ்ந்துள்ளது.பார்ப்பவர்களை பதறவைக்கும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது, 

அதில்,சீனாவில் தடைசெய்யப்பட்ட நீர்வீழ்ச்சி பகுதியில் ஒருவர் ஸ்டண்ட் செய்ய முயன்றபோது,அது அவருக்கே பயங்கர விபத்தாக அமைந்தது.

நீர்வீழ்ச்சியின் உச்சியில் ஒரு புறத்திலிருந்து தண்ணீரை கடந்து  மற்றொரு புறம் செல்ல முயன்ற  பொது நிலைதடுமாறி,உச்சியில் உள்ள வழுக்கும் பாறைகளின்  மேல் விழுந்து, நீர்வீழ்ச்சின் கீழ் பகுதிவரை சரிந்து விழுந்தார்.

அந்த நபர் கீழே விழும் வீடியோவை ‘சவுத் சைனா மார்னிங் போஸ்ட்’ தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.மனதை பதைபதைக்க வைக்கும் இந்த  வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.