அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட அடுத்த நடிகை! சோகத்தில் ரசிகர்கள்

186
Advertisement

மயோசிட்டிஸ் எனும் தசை அழற்சி நோயால் நடிகை சமந்தா அவதிப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. இதே போல பல திரை நட்சத்திரங்களையும் விநோதமான நோய்கள் தாக்கி வருவது வாடிக்கையாகவே மாறிவிட்டது.

இந்நிலையில், மலையாள நடிகை மம்தா மோகன்தாஸ் விட்டிலிகோ நோயால் பாதிக்கட்டுள்ளதாக பகிர்ந்துள்ளார். சரும நிறத்தை இழக்க செய்யும் இந்த நோய்க்கு நேரடியான தீர்வு இல்லை.

பாதிப்பு தீவிரமடைவதை மட்டுமே தடுக்க முடியும் சிகிச்சை முறைகளை, கொண்டுள்ள இந்த நோய்க்கு ஆளான மம்தாவிற்கு சக திரை பிரபலங்களும், ரசிகர்களும் ஆறுதல் கூறி வருகின்றனர். மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வரும் மம்தா, 2006ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளிவந்த ‘சிவப்பதிகாரம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.