ஆற்றில் தலைகுப்பர கவிழ்ந்த லாரி ஒருவர் பலி

296
Advertisement

திருச்சியில் இருந்து திருக்காட்டுப்பள்ளிக்கு சரக்கு ஏற்றி வந்த லாரி பாலத்திலிருந்து ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த லாரி வெண்ணாற்று பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பாலத்தில் நிலை தடுமாறி தலைகுப்புற ஆற்றில் விழுந்தது.

லாரியில் வந்த ஓட்டுனர் மொய்தீன் கான், அசோகன், கருப்பசாமி, நிசார் அகமது, சக்தி ஆகியோர் காயத்துடன் மீட்கப்பட்டு தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சரக்கு வாகனத்தின் மீது அமர்ந்து வந்த கார்த்திக் என்பவரை காணாத நிலையில், அவரை தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர்.வாகனம் தலைகுப்புற கவிழ்ந்து இருப்பதால் மீட்கும் முயற்சியில் காவல்துறைனர் ஈடுபட்டனர். அப்போது கார்த்திக் என்பவர் கவிழ்ந்து கிடக்கும் சரக்கு வாகனத்தில் அடிப்புறத்தில் சிக்கி உயிர்யிழந்திருந்தார்.