அம்மாபோல் சேலை அணிந்து தன் அழகை கண்ணாடியில் ரசித்த “பெண் குழந்தை”

290
Advertisement

பெண் குழந்தைகள் என்றுமே ஒரு வரம் தான்.பெண் குழந்தைகள் வாழும் வீடு “தேவதைகள் வாழும் வீடு, அவர்கள் தான் வீட்டின் குட்டி தேவதைகள்”.

பெண் குழந்தைகள் இருந்தாலே வீட்டில் குதூகலம் , கொண்டாட்டத்திற்கு குறைவே இருக்காது.அம்மாவின் புடவைகளாக இருந்தாலும் சரி, அப்பாவின் பெரிய குர்தாவாக இருந்தாலும் சரி, குழந்தைகள் அந்த உடையை  உடுத்தி விளையாட விரும்புவார்கள்.

தன்னை ஒரு பெரிய மனுஷி போல காட்டிக்கொள்ளவேண்டும் என  அவர்கள் செய்யும் சேட்டைகளை ராசிக்காதவர்கள்  உணர்வற்றவர்கள் என்றே சொல்லலாம்.

இந்நிலையில் ,இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பகிர்ந்த  வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.அதில் , குட்டி தேவதை ஒன்று தன் அம்மாபோல புடவை அணிந்து உள்ளது.

முகத்தில் புன்சிரிப்புடன் கண்ணாடி முன்னே நின்று  தன்தனை தானே  ரசித்து பார்க்கிறார் இந்த குழந்தை.ரசித்துப்பார்த்தது அந்த குழந்தை மட்டும் அல்ல , 20 மில்லியனுக்கும் அதிகமானோர் சேலை கட்டிய இந்த குட்டி  தேவதையின் செயலை ரசித்து உள்ளனர்.