இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில் பாஷைகள் எதுவும் தேவையில்லை!

15
Advertisement

அழகான மற்றும் மிகவும் உறுதியான உறவு என்பது பலரும் நினைப்பது போல காதலிக்கும் நபர்களிடையே இல்லை! இது தந்தைக்கும் மகள்களுக்கும் இடையிலான உறவு தான்.தந்தை என்பவர் தன் மகளை பத்திரமாக கவனித்துக்கொள்வதில் இருந்து , வெவ்வேறு சிரமங்களிலிருந்து அவளைப் பாதுகாக்கிறார்,தன் மகளின்  சிறிய பிரச்சினைகளை கூட தீர்க்கிறார் என்பதை விட அதிகமான தொடுதல் எதுவாக இருக்கமுடியும் ?

என்னதான் பத்துமாசம் சுமந்து தாய் பிள்ளைகளை பெற்றிருந்தாலும் , பெண் குழந்தைகள் தந்தையிடமே அதிக நெருக்கமாக இருப்பார்கள்.தந்தை தான் அவளின் நிஜ ஹீரோவாக இருப்பார்.

Advertisement

அவள் வாழ்வில்  பின்பற்றும்  நற்குணங்கள் அவளின் தந்தையிடம் இருந்தே அதிகம் பழகிருபாள் . தன் தந்தை செய்வதை போலவே தானும் செய்யும் குணம் உண்டு குழந்தைகளுக்கு.அது சில நேரங்களில்  வேடிக்கையாகவும் இருக்கலாம்.

https://www.instagram.com/p/Cc52IvND9_0/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.சிறுமி ஒருவர் தன் தந்தையை போலவே நடந்து செல்கிறார்.இதை கவனித்த சிறுமியின் தாய்க்கு  முதலில் தெரியவில்லை , பின்பு தான் தெரிந்தது அவளின் தந்தையை போல கைகளை பின்னே கட்டிக்கொண்டு நடக்கிறாள் என்று.

தந்தையிடம் கற்றுக்கொள்ளும் ஒவ்வொரு விஷயமும் மகளின் வாழ்வில் மாற்றத்தை உண்டாக்கும் என்பதே உண்மை.சிறுமியின்  இந்த செயல் இணையத்தில் அனைவரையும் ரசிக்கவைத்துள்ளது.