“தந்தையை பிரியும் சிறுமி”கண்கலங்கவைக்கும் வீடியோ

310
Advertisement

இராணுவத்தில் பணியாற்றும் பெற்றோர்களின் குழந்தைகள் வலிமையானவர்கள்.அணைத்து சவால்களை எதிர்கொள்ள பழக்கப்பட்டு இருப்பார்கள்.

பெற்றோர்கள்  தங்கள் கடமைக்காகப் புறப்படும்போது விடைபெறுவதைப் பார்ப்பது மிகவும் உணர்ச்சிகரமானது.இதுபோன்று பணிக்கு திரும்பும் தன் தந்தைக்கு ஒரு சிறுமி ஊக்கம் அளிக்கும்விதம் சில வார்த்தைகளை கூறி அனுப்பிவைக்கிறாள்.

கண்கலங்கவைக்கும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி  வருகிறது.அந்த வீடியோவில் சிறுமி தனது தந்தையுடன் உரையாடிக்கொண்டிருக்கிறார்.”வலுவாக இருங்கள், கடவுள் மீது நம்பிக்கை வையுங்கள் ,   கடவுள் உங்களை பார்க்கிறார்,அவர் உங்களை நம்புகிறார்,நீங்கள் பிராத்தனை செய்ய வேண்டும், அவரை நம்புங்கள்… மேலும் நீங்கள் எனக்காக சில படங்களை எடுத்து அனுப்புங்கள் நான் பார்க்க விரும்புவதாக  தந்தையிடம் கூறுகிறாள்.

குழந்தை தன் தந்தையிடம் கூறும் இந்த வார்த்தைகளை கேட்டு அங்கிருந்த பெண் ஊழியர் கண்கலங்கி அழுதுகொண்டு உள்ளார். “இனிமையான மற்றும் அழகான ஆன்மா” என்று தலைப்புடன் இந்த வீடியோ இணையத்தில் பார்ப்போரை கண்கலங்க வைத்து வருகிறது.