ஹிந்தி ஹீரோயின்களை ஓரம் கட்டிய “சிறுமி”

296
Advertisement

இந்த உலகத்தில யாரு கவலை இல்லாம மகிழ்ச்சியா இருக்காங்கனு கேட்டா ,குழந்தைகள் தான் என அனைவருமே  சொல்லுவார்கள்.குழந்தை பருவம் என்றுமே மகிழ்ச்சியின் வெளிப்பாடாக இருக்கும்,அவர்களை  சுற்றியுள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளும்.

இது போன்று, குழந்தைகள்  இந்த உலகை மறந்து தனக்கு பிடித்த செயல்களில்  ஈடுபடும் தருணம் வீடியோக்கள் வாயிலாகவும்  அல்லது நம் இல்லத்தில் உள்ள குழந்தைகள் மூலமாகவும்  கூட நம்மையும் கவலைகளை மறந்து மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

தற்போது, மற்றொரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.அதில்,ஒரு சிறுமி மெட்ரோ இரயிலில் தன் பெற்றோர்களுடன்  பயணித்துக்கொண்டு இருக்கிறார்.குழந்தைகள் என்றாலே ஒரு இடத்தில உட்காரமாட்டாங்கல என்பதை போல,அம்மாவின் போனில் ஹிந்தியின் பிரபல பாடல் ஒன்றை போட்டுவிட

அந்த பாடலில் வரும் கிட்டார் இசைக்கேற்ப தன் முக பாவனைகளுடன்,நடனம் ஆடுகிறார்.ஹீரோஹிங்களே ஓரம் நின்று இந்த சிறுமியின் நடனத்தை ரசிக்கலாம் போல இருக்கும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.