அம்மா கொளுத்தும் வெயிலில் வியாபாரம் செய்தபோது,நெஞ்சை உருகவைக்கும் மகள் செய்த காரியம்

204
Advertisement

பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகள் தான் உலகம்.தான் என்னதான் கஷ்டப்பட்டாலும் தன்  பிள்ளைகளுக்கு  சிறுகஷ்டமும் நேரிடக்கூடாது என்ற எண்ணம் கொண்டவர்கள் தான் பெற்றோர்கள்.

அதேநேரத்தில்  பெற்றோர்கள் படும் கஷ்டத்தை தவிர்க்க பிள்ளைகள் உதவினால் ,இதை தவிர வேறு உணவர்ச்சிபூர்வமான பந்தம்  எதுவாக இருக்கும். ? இதனை இணையத்தில் பகிர்ந்த இந்த வீடியோ உணர்த்துகிறது.

இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், சாலையில் ஒரு பெண் கடுமையான வெப்பத்தில் பழங்களை விற்பனை செய்கிறார். அவரது சிறிய மகளும் பின்னால் இருக்கிறார்.கொளுத்தும் வெயிலில் உழைக்கும் தாயைப் பார்த்த மகளால் இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

அவள் உடனே ஒரு அட்டையை எடுத்து தன் அம்மாவிற்கு விசிறி விட  ஆரம்பித்தாள். அம்மா பழங்கள் விற்கிறார் , மகள் அவரை  வெப்பத்திலிருந்து காப்பாற்ற முயற்சிக்கிறாள். இருவரின் இந்த வீடியோ அனைவரையும் உணர்ச்சிவசப்பட வைக்கும் வகையில் உள்ளது.