குறிஞ்சிப் பூ

312
Advertisement

குறிஞ்சி மலர்கள் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான்
பூக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.

3 மாதங்களுக்கொரு முறை, 7 ஆண்டுகளுக்கொரு முறை,
12 ஆண்டுகளுக்கொரு முறை, 17 ஆண்டுகளுக்கொரு முறை,
36 ஆண்டுகளுக்கொரு முறை என்று பலவகை மலர்கள் உள்ளன.

இதில் 12 ஆண்டுகளுக்கொரு முறை பூக்கும் பூவிலுள்ள
தேன்தான் தித்திப்பு அதிகமாகவும் மிகுந்த சுவையுடனும் இருக்கும்.

Advertisement

இவற்றிலுள்ள மகரந்தங்கள் புவியில் விழுந்து விதையாகி
செடியாகி பூப்பூக்க அதிக காலம் எடுத்துக்கொள்கிறது.

குறிஞ்சிப் பூவின் அரும்பு, மொட்டு, முகை, மலர், அலர், வீ,
செம்மல் என ஏழு பருவங்களும் முழுமைபெற்று வளர
அதிக காலம் எடுத்துக்கொள்கின்றன. அதனால்தான் இவை
12 ஆண்டுகளுக்கொரு முறை பூக்கின்றன.

மனித உடலில் உள்ள மரபணுக்கள் எப்படி வேலை
செய்கின்றனவோ அப்படியே இந்தப் பூக்களிலுள்ள
மரபணுக்களும் வேலைசெய்கின்றன.