கனியாமூர் : போலீஸ் வாகனத்திற்கு தீ வைத்த நபரை வீடியோ ஆதாரத்தை வைத்து சிறப்பு புலனாய்வுத் துறை போலீசார் கைது செய்தனர்.

23
Advertisement

கனியாமூர் பள்ளி வன்முறையின்போது, போலீஸ் வாகனத்திற்கு தீ வைத்த நபரை வீடியோ ஆதாரத்தை வைத்து சிறப்பு புலனாய்வுத் துறை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த கனியாமூர் ஸ்ரீ சக்தி மெட்ரிக் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்ம மரணத்தை தொடர்ந்து, கடந்த 17 ஆம் தேதி அப்பள்ளி சூறையாடப்பட்டது. பள்ளி பேருந்துகள் மற்றும் போலீஸ் பேருந்துகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இந்த வன்முறை தொடர்பாக 350-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வன்முறையின்போது, போலீஸ் வாகனத்திற்கு தீ வைத்தது தொடர்பாக வீடியோ ஆதாரத்தை கொண்டு தீவிரமாக தேடப்பட்டு வந்த கள்ளக்குறிச்சி சேர்ந்த வசந்தன் என்ற இளைஞரை சிறப்பு புலனாய்வுத் துறை போலீசார் கைது செய்துள்ளனர்.