புழல் சிறையில் இருந்து ஜெயக்குமார் இன்று காலை விடுதலையாகிறார்

254
Advertisement

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சி 49-வது வார்டில் கள்ள ஓட்டுப்போட முயன்றதாக தி.மு.க. பிரமுகர் நரேஷ் என்பவரை தாக்கி கைகளை கட்டி இழுத்து வந்த வழக்கில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்.

பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட காரணத்துக்காக அவர் மீது 2-வது வழக்கும், ரூ.5 கோடி மதிப்புள்ள மீன் வலை தொழிற்சாலை அபகரிப்பு தொடர்பாக 3-வது வழக்கும் பதிவு செய்யப்பட்டன. தி.மு.க., பிரமுகரை தாக்கிய வழக்கில் அவருக்கு ஜாமீ்ன் வழங்க கீழ் கோர்ட்டு மறுத்ததால் , ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சென்னை ஐகோர்ட்டு நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது . மேலும் திருச்சியில் தங்கியிருந்து அங்குள்ள கண்டோமெண்ட் காவல் நிலையத்தில் 2 வாரங்களுக்கு கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.

இதனால் அவர் சென்னை புழல் சிறையில் இருந்து இன்று காலை 6 மணிக்கு விடுதலை செய்யப்படுகிறார்.