முன்னாள் பிரதமர் மறைவு – அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்ட தேசிய கொடி

281

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமராக இருந்தவர் ஷின்சோ அபே. இந்நிலையில் நேற்று நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரின் மறைவுக்கு உலக நாட்டு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய பிரதமர் மோடி, ஷின்சோ அபே மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, இன்றைய நாள் துக்க நாளாக அனுசரிக்கப்படும் என அறிவித்தார்.

இதனையடுத்து டெல்லி செங்கோட்டை, நாடாளுமன்ற கட்டடம், குடியரசு தலைவர் மாளிகையில் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே மரணத்திற்கு அமெரிக்க அதிபர் பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில், ஜப்பான் பிரதமரை தொடர்பு கொண்ட அமெரிக்க அதிபர் பைடன் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொண்டதாக கூறப்பட்டுள்ளது

இதேபோல், ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே மறைவுக்கு ஐ.நா.பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  அபேயின் பயங்கரமான மரணத்தால் வருத்தமடைந்ததாக கூறினார். அவர் பலதரப்புவாதத்தின் உறுதியான பாதுகாவலராகவும், மதிப்பிற்குரிய தலைவர் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவாளராகவும் நினைவு கூறப்படுவார்” என்றும் அன்டோனியோ குட்டெரஸ் தெரிவித்தார்.