விஜயின் 68வது படத்தை இவரா இயக்க போகிறார்? அதிர்ச்சியில் ரசிகர்கள்

157
Advertisement

தமிழ் சினிமாவின் டாப் ஹீரோவாக வலம் வரும் விஜய், அடுத்தடுத்து என்ன படங்களில் நடிக்க போகிறார் என்பதை பற்றிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது.

வம்சி இயக்கிய ‘வாரிசு’ திரைப்படம் வசூலில் காப்பாற்றினாலும் விமர்சன ரீதியாக வெகுவாக அடிவாங்கியது.

படத்தின் கால அளவு, விஜயின் நடனத்திறமைக்கு ஒத்துவராத ஜானி மாஸ்டரின் கோரியோ மற்றும் மெதுவாக நகர்ந்த திரைக்கதை என பல காரணிகள் ‘வாரிசு’ படத்தில் எதிர்மறையாக அமைந்த நிலையில், அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதை அறிந்து நிம்மதி பெருமூச்சு விட்டனர் விஜய் ரசிகர்கள்.

லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘லியோ’ திரைபட ஷூட்டிங் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இதற்கிடையே, விஜயின் 68வது திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆர்.பி.சவுத்ரி தயாரிக்க உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கி, அடுத்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆக வாய்ப்பிருப்பதாக கூறப்படும் நிலையில், மீண்டும் தெலுங்கு இயக்குனரிடம் விஜய் நடிக்க போகிறார் என்ற செய்தி அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.