தகுதி சுற்றுக்குள் நுழைந்த பெங்களூரு அணி

377

கொல்கத்தா ஈடர்ன் கார்டர் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் வெளியேற்றுதல் சுற்று நடைபெற்றது.

இந்த போட்டியில் தோல்வி பெறும் அணி வெளியேறும் என்பதால் லக்னோ, பெங்களூரு ஆகிய இரு அணிகளும் இன்றைய போட்டியில் வெற்றி பெற கடும் முனைப்புடன் களமிறங்கின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 4 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது.

இதனால் லக்னோ அணிக்கு 208 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

பெங்களூரு அணியில் படித்தர் 54 பந்துகளில் 112 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் குயின்டன் டி காக், சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அவரை தொடர்ந்து மனன் வோரா 19 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதையடுத்து, வெற்றிக்கு 24 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், லக்னோ அணியால் 9 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதனால் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்தது.

இறுதியில் பெங்களூரு அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-வது தகுதி சுற்றுக்குள் நுழைந்தது.