காங்கிரஸ் கட்சி மற்றும் பாரத் ஜோடோ வலைதள பக்கங்களை முடக்க உத்தரவுக்கு இடைக்கால தடை

190
Advertisement

கேஜிஎப் படத்தின் பாடலை அனுமதியின்றி பாரத் ஜோடோ யாத்திரையில் பயன்படுத்தியயதாக காங்கிரஸ் கட்சி மற்றும் பாரத் ஜோடோ வலைதள பக்கங்களை முடக்க உத்தரவிட்ட பெங்களூரு நீதிமன்ற தீர்ப்புக்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

காங்கிரஸ் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் அபிசேக் சிங்வி, பதிவுகளை நீக்க ஒப்புக்கொண்ட பிறகும் கட்சியின் சமூக வலைத்தள பக்கங்களை முடக்கினால், அது கருத்து உரிமை சுதந்திரத்தை பறிக்கும் செயல் என வாதிட்டார். இதையடுத்து, கீழமை நீதிமன்ற தீர்ப்புக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.