உலகத்தில் பல்வேறு விதமான சுற்றுலா தளங்கள் இருக்கிறது, ஆனால் கிராமப்புற சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், மத்திய அரசு துடிப்பான கிராம திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.
இந்த முயற்சியின் கீழ்
இந்திய சீன எல்லைகளில் உள்ள இமாச்சலப் பிரதேசம், லடாக், சிக்கிம், உத்தரகண்ட் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள 663 எல்லைக் கிராமங்களில் சுமார் 17 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த கிராமங்கள் அனைத்தும் புதுப்பிக்கப்படும் என்று அரசு தரப்பு அறிக்கைகளில் தெரியவந்துள்ளது.
அதேசமயம் சுற்றுலாவை பயணிகளுக்கான வசதிகள் மற்றும் சிறந்த போக்குவரத்து இணைப்பு திட்டங்கள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு முதன்மை கவனம் செலுத்தப்பட இருக்கிறது. இங்கு சுமார் 120 தங்கும் விடுதிகள் கட்டப்படும் அல்லது மறுகட்டமைக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. அதோடு உத்தரகாண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பகுதிகள் வழியாக மலையேற்ற பாதைகள் உருவாக்கப்படும்.
சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தின் பகுதிகள் ஐஸ் ஸ்கேட்டிங், ரிவர் ராஃப்டிங், பனிச்சறுக்கு மற்றும் பல சாகச விளையாட்டு வசதிகளும் கொண்டுவரப்பட உள்ளது.
மேலும், இந்த லட்சிய திட்டத்தில் உள்ள 17 கிராமங்களில் இருக்கும் சுற்றுலா மையங்களின் வளர்ச்சியுடன் சுத்தமான குடிநீர், அனைத்து வானிலை சாலை அணுகல், மொபைல் நெட்வொர்க், மின்சாரம், இணைய இணைப்பு ஆகியவற்றை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.