பாகிஸ்தானில் தரையிறங்கிய இந்திய விமானம்-ஒரு மாதத்தில் 8 முறை ஒரே நிறுவனத்தை சேர்ந்த விமானத்தில் கோளாறு

302
Advertisement

ஷார்ஜாவில் இருந்து ஹைதராபாத் கிளம்பிய விமானம்,தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாகிஸ்தானில் உள்ள  கராச்சியில் தரையிறக்கப்பட்டது. இண்டிகோ விமானம் ஷார்ஜாவிலிருந்து சனிக்கிழமை இரவு 11:02 மணிக்கு புறப்பிட்ட நிலையில்,நடுவானில் விமானத்தில்  ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாக்கிஸ்தான் கராட்சிக்கு திருப்பி விடப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளது விமான நிறுவனம்.

மேலும், ஹைதராபாத் பயணிகளை ஏற்றிச் செல்ல கூடுதல் விமானம் கராச்சிக்கு அனுப்பப்படும் என்றும் தெரிவித்தது.இந்நிலையில், இரண்டு வாரங்களில் கோளாறு காரணமாக முன்னெச்சரிக்கை என இந்திய விமானம் கராச்சியில் தரையிறங்கிய இரண்டாவது இந்திய விமான நிறுவனம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, ஜூலை 5 ஆம் தேதி, புதுடெல்லியிலிருந்து துபாய் சென்ற  ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு  ஏற்பட்டதையடுத்து, பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கையாக தரையிறக்கப்பட்டது.ஜூன் 19 முதல் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் குறைந்தபட்சம் எட்டு தொழில்நுட்ப கோளாறுகள் இதுவரை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக,டெல்லி-வதோதரா இண்டிகோ  விமானம் நடுவானில் , விமானத்தின் என்ஜின்களில் அதிர்வுகள் காணப்பட்டதால்,  ஜெய்ப்பூருக்கு திருப்பி விடப்பட்டது.தொடர்ந்து ஏற்பட்ட விமான கோளாறு காரணமாக,இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது டிஜிசிஏ.