தவறான தகவலை பரப்பியதால்  22 YOU TUBE சேனல்களை முடக்கியது மத்திய அரசு

330
Advertisement

தேச பாதுகாப்பு குறித்து இந்த சேனல்கள் தவறான தகவல்களைப் பரப்பியதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.தடை செய்யப்பட்ட 22 சேனல்களில் 18 சேனல்கள் இந்தியாவை சேர்ந்தவை. 4 சேனல்கள் பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படுபவை.

இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் ,

 ” இந்தியாவின் ராணுவ அமைப்பு, ஜம்மு காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு இந்திய விவகாரங்கள் குறித்து, பல யூ டியூப் சேனல்கள் தவறான தகவல்களை பரப்பியுள்ளன. இவை அனைத்தும் தேச விரோதமான மைய கருத்துக்களை உள்ளடக்கியவை. இவற்றில் பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் யூ டியூப் சேனல்களும் அடங்கும். பொய்யான தகவல்களை பரப்பிய யூ டியுப் சேனல்கள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வந்தன.

உக்ரைன் பிரச்னை தொடர்பாகவும் சில இந்திய யூ டியூப் சேனல்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளன. இந்தியாவின் வெளியுறவு கொள்கைகள், உலக நாடுகளுடன் இந்தியா கொண்டிருக்கும் உறவு ஆகியவற்றின் மீது, அவதூறு பரப்பும் நோக்கத்தோடு இவை வீடியோக்களை பதிவிட்டுள்ளன ” என தெரிவித்துள்ளது

இதன் காரணமாகவே தற்போது 22  யூ டியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளது மத்திய அரசு.