இதில் சீனாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா

310

வலிமையான விமானப்படையை கொண்டுள்ள நாடுகளை ஆய்வு செய்த நிறுவனம் ஒன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

98 நாடுகளின் 124 விமானப்படை சேவைகள் மற்றும் 47,140 போர் விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்தி இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் அமெரிக்கா, ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 3வது இடம் பிடித்துள்ளது.

இந்திய விமானப்படை சீனா, ஜப்பான், இஸ்ரேல், பிரான்ஸ் விமானப்படைகளை பின்னுக்கு தள்ளியது.

இதில் அமெரிக்கா 242.9 புள்ளிகளை பெற்று முதலிடத்தையும் ரஷ்யா 114. 2 புள்ளிகளுடன் 2ம் இடத்தையும் இந்தியா 69. 4 புள்ளிகளுடன் 3ம் இடத்தையும் பிடித்துள்ளது.

இந்தியாவில் ஆயிரத்து 645 போர் விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன.

 விமானப்படையில் ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 576 பேர் நாட்டிற்காக பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.