சவுதி பெண்களிடம் பிரபலமடைந்து வரும் Boy cut

533
Advertisement

பெண்கள் உரிமையில் மிகவும் பின்தங்கி இருந்த சவுதி, முற்போக்கு பாதையில் வேகமாக பயணிக்க துவங்கி இருக்கிறது.

சவுதியில் நிலவிய பிற்போக்கு சிந்தனையுடைய பல பழமைவாத பழக்கங்களை மாற்றி, மாற்றத்துக்கு வித்திட்டவர் தற்போதைய இளவரசர் மொஹமத் பின் சல்மான்.

2017இல் சினிமா மற்றும் இசை கச்சேரிகளுக்கு இருந்த தடைகளை நீக்கியதும், 2019ல் பெண்கள் வாகனங்களை ஓட்டுவதற்கும் அனுமதித்தது சவுதியின் நாகரீக வளர்ச்சியில் முக்கிய மைல் கல்லாக பார்க்கப்படுகிறது.

அதே ஆண்டில், கட்டாய ஹிஜாப் அணிய தேவை இல்லை என்ற அறிவிப்பும், ஆண்கள் துணை இல்லாமல் வெளியே செல்ல மற்றும் வீடுகளில் தனியாக பெண்கள் வசிக்கலாம் போன்ற சூழல் உருவாகியதும், பெண்களின் தனித்துவமான முன்னேற்றத்துக்கு வழி வகுத்தது.

இந்நிலையில், அண்மையில் சவுதியில்,  boy cut முறையில் தலைமுடியை வெட்டி கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சவுதியில் உள்ள சலூன்களில் நாளொன்றுக்கு 7 பெண்களுக்கு குறையாமல் இந்த haircutக்கு மாறி வருவதாக, சலூன் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வேலைக்கு செல்லும் பல பெண்கள், தங்களுக்கு நீளமான முடியை பராமரிக்க நேரம் இல்லாததே முடியை வெட்டுவதற்கான காரணம் என பகிர்ந்துள்ளனர்.

எனினும், சில பெண்கள், இப்படி தான் பெண்ணின் தலைமுடி இருக்க வேண்டும் என கூறும் சமூகத்தின் மீது எதிர்ப்பை பதிவு செய்யவே boycutக்கு மாறியுள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர்.