திருப்பூரில், குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகியது…

18
Advertisement

திருப்பூர்  பல்லடம்- தாராபுரம் சாலையில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. 

இந்த வழித்தடத்தில் ராட்சத குழாய்கள் அமைத்து எல்என்டி நிறுவனம் சார்பில் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.  இந்நிலையில், சாலை விரிவாக்க பணியின்போது விவேகானந்தா பள்ளி அருகே ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், தண்ணீர்  பீய்ச்சியடித்து வெளியேறியது. தகவல் அறிந்து வந்த சாலை விரிவாக்க பணியாளர்கள்  குழாயில் ஏற்பட்ட  உடைப்பை சரி செய்தனர்.