தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தில் ஆலை  பராமரிப்பு பணிகள் சார்ந்த  நாடகங்கள் வேண்டாம் என பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

125
Advertisement

தூத்துக்குடி  ஸ்டெர்லைட் ஆலை மூடி 5 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில்,  மூடி இருக்கும் ஆலையை பராமரிக்க அனுமதிக்குமாறு ஸ்டெர்லைட் அளித்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தால் பரிசீலிக்கபட்டதால் அரசு ஒரு உயர்மட்ட குழு அமைத்தது. 

இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மக்கள் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை எதிர்க்கின்றார்கள் என்ற செய்தி அரசை சென்றடைய வேண்டும் என்று  எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்திருந்தனர்.   இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.