தமிழகத்தில் இன்று முதல் தனியார் பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

97

தமிழகத்தில் தினந்தோறும் உற்பத்தியாகும் சுமார் 2 கோடியே 25 லட்சம் லிட்டர் பாலில், அரசு நிறுவனமான ‘ஆவின்’ மூலமாக 38 லட்சத்து 26 ஆயிரம் லிட்டர் பால், கொள்முதல் செய்யப்படுகிறது. மீதமுள்ள பாலை தமிழகம் மற்றும் ஆந்திராவை சேர்ந்த தனியார் நிறுவனங்களே கொள்முதல் செய்கின்றன. இந்நிலையில், சீனிவாசா பால் நிறுவனம் இன்று முதல் பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாயை உயர்த்தி இருக்கிறது. ஹட்சன் நிறுவனம் பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்த இருக்கிறது. இதேபோல, மற்ற நிறுவனங்களும் பால் விலையை அடுத்தடுத்த நாட்களில் லிட்டருக்கு 4 ரூபாய் வரை உயர்த்த திட்டமிட்டுள்ளன. தனியார் பால் விலை உயர்வு காரணமாக பால் சார்ந்த இதர பொருட்களும் விலை உயரும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.