ஒற்றை தவறினால் விஷமாக மாறும் இட்லி, தோசை! மக்களே உஷார்…

214
Advertisement

‘காலையில் என்ன சாப்டீங்க’ என்ற கேள்விக்கு 90 சதவீத தென் இந்தியர்களின் பதில் இட்லி அல்லது தோசை என்பதாகத் தான் இருக்கும். இரவு உணவிற்கும் பெரும்பாலான மக்கள் இவற்றையே சாப்பிடுகின்றனர்.

எளிதாக செரிமானம் ஆகக் கூடிய மற்றும் அனைவருக்கும் பிடித்த உணவாக இருக்கும் இட்லி தோசை செய்யும் மாவு சீக்கிரம் புளிக்க வேண்டும் என்பதற்காக சேர்க்கப்படும் பேக்கிங் சோடா மற்றும் ஈனோ போன்ற பொருட்கள் உடலுக்கு மிகவும் கேடாக அமைகிறது.

சோடியம் பைகார்போனேட் எனும் பேக்கிங் சோடா, இரத்தத்தில் உள்ள PH அளவை அதிகரிப்பதோடு சிறுநீரகத்தையும் வெகுவாக பாதிக்கிறது. Antacid ஆக பயன்படுத்தப்படும் ஈனோ மருந்தில் 60 சதவீதம் வரை சோடியம் உள்ளது. இட்லி பஞ்சு போல வர வேண்டும் என்பதற்காக ஹோட்டல்களில் மட்டும் இல்லாமல் வீடுகளிலும் சிலர் இந்த மருந்தை மாவில் கலக்கின்றனர்.

ஆனால், இப்படி சேர்ப்பதால் உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டு, நோய் எதிர்ப்பு திறன் குறைய வழி வகுக்கிறது. மேலும், பல வகையான பாக்டீரியா மற்றும் அலர்ஜி ஏற்படவும் காரணமாக அமைகிறது. பேக்கிங் சோடா கலப்பதால் அஜீரணம், உடற்சோர்வு ஏற்படுவதோடு சக்கரை அளவுகளும் உயரக் கூடும். சோடாவில் உள்ள பாஸ்பரிக் அமிலம், உணவில் இருக்கும் கால்சியத்தை உடல் உள்வாங்குவதை தடுக்கிறது.

இப்படி தீங்கு விளைவிக்கும் முறைகளை கையாள்வதை விட்டு, இயற்கையான முறையில் முன்தினம் அரைத்து வைத்த மாவை பயன்படுத்துவதே சிறப்பான ஆரோக்கியத்துக்கு உதவும் என்பதே உணவியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.