தன்னைத் தானே ஓவியம் வரைந்த யானை

311
Advertisement

தன்னைத் தானே ஓவியமாக வரைந்த யானையின் வீடியோ
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இது பழைய வீடியோ என்கிற போதிலும் தற்போது
அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

குழந்தைகள், மலைகள், ஆறுகள், இயற்கைக் காட்சிகள் போன்ற
பார்க்கப் பார்க்க சலிக்காதவற்றுள் யானையும் ஒன்று. அந்த வகையில்
இந்த யானையை மட்டுமன்றி, அது வரையும் ஓவியத்தையும் பார்த்துக்கொண்டே
இருக்கலாம் போலிருக்கிறது.

மனிதனைவிட அழகாக ஓவியம் வரைகிறது அசாத்திய திறமை கொண்ட
இந்த யானை. தன்னைப் பார்க்காமலேயே பெயின்ட்டைத் தொட்டு பிரஷ்
கொண்டு வரையும் அழகை எவ்வளவு நேரமானாலும் சலிக்காமல்
பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது.

நன்கு பயிற்சி பெற்ற ஓவியர்கூட ஏதோ ஒரு படத்தைப்
பார்த்துக்கொண்டே வரைவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால்,
எந்தப் படத்தையும் பார்க்காமல் இந்த யானை எந்தத் தடுமாற்றமும்
இன்றி, மிக அழகாக, நேர்த்தியாக சிறு பிசிறும் இல்லாது வரைகிறது.

மிகவும் தத்ரூபமாக உள்ளது இந்த ஓவியம். அதேசமயம் சிலர் இதை
விமர்சித்துள்ளனர். யானைக்கெனத் தனித்திறமை உள்ளது.
காட்டைவிட்டு வெளியே கொண்டு துன்புறுத்தி
பயிற்சியளித்து ஓவியம் வரைய வைத்துள்ளனர் என்கின்றனர் சிலர்.