“நீட் தேர்வு ரொம்ப கஷ்டமா இருக்கு” – தாய்க்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவன் தற்கொலை

70

ஓசூரில், நீட் தேர்வு ரொம்ப கஷ்டமா இருக்கு என்று தாய்க்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு, மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசனட்டி சூர்யா நகர் பகுதியை சேர்ந்த கோபி-மோகன சுந்தரியின் மூத்த மகன் முரளி கிருஷ்ணா.

கடந்த ஆண்டு பிளஸ் 2 படித்து முடித்த முரளி கிருஷ்ணா, அப்போதே, நீட் தேர்வு எழுதி 160 மதிப்பெண்கள் எடுத்து தோல்வி அடைந்தார்.

Advertisement

இதனையடுத்து மாணவர் இந்த ஆண்டும் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் முரளி கிருஷ்ணா, தனது அறையினுள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தியபோது, மாணவன் கைப்பட எழுதிய கடிதம் கிடைத்தது.

அந்த கடிதத்தில், தனக்கு நீட் தேர்வு ரொம்ப கஷ்டமா இருக்கு, என்னால நீட் தேர்வில் நல்ல மார்க் ஸ்கோர் பண்ண முடியல, என்ன மன்னிச்சிருமா என்று தனது தாய்க்கு கடிதம் எழுதி உள்ளார்.

மாணவர் இறப்பு குறித்து போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போட்டி தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தூக்கு போட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.