தைவானுடனான உறவை முறித்துக்கொண்ட ஹோண்டுராஸ் நாடு சீனாவில் தனது தூதரகத்தை திறந்துள்ளது….

123
Advertisement

சீனாவில்இருந்து பிரிந்த தைவானை இன்னும் தங்களது கட்டுப்பாட்டில் உள்ளதாக சீனா கூறி வருகிறது.

இதனால், தைவானுடன் வர்த்தகம் மற்றும் தூதரக உறவுகளில் ஈடுபட வேண்டாம் என பிற நாடுகளை சீனா எச்சரித்தது. இந்நிலையில், தைவானுடனான தனது உறவை ஹோண்டுராஸ் நாடு சமீபத்தில் முறித்துக்கொண்டது.

இதற்கு பதிலடியாக, தைவானும் ஹோண்டுராஸ் நாட்டில் உள்ள தனது தூதரகத்தை மூடியது. இந்நிலையில், சீன தலைநகர் பீஜிங்கில் ஹோண்டுராஸ் தனது தூதரக அலுவலகத்தை திறந்துள்ளது.