இவர் இருக்குற அணிக்கு எப்பவும் வெற்றி தான்! KKR வீரரை புகழ்ந்து தள்ளிய ப்ரெட் லீ…!

107
Advertisement

கிரிக்கெட் ரசிகர்களின் favourite தொடர்களில் டாப் இடத்தை பிடித்துள்ள IPL போட்டியின் 16வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

53வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து களம் இறங்கிய கொல்கத்தா அணி கடைசி பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு தள்ளப்பட்டது.

கடைசிப்பந்தில் பௌண்டரி விளாசி, அணிக்கு வெற்றியை உறுதி செய்து கொடுத்த ரிங்கு சிங்கிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில், முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான ப்ரெட் லீ, பொழுதுபோக்குடன் கலந்த பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ரிங்கு சிங்க் அவரை நேசிப்பதற்கு பல காரணங்களை அளித்து வருகிறார்.

இளவயது வீரர் ஒருவர் இவ்வாறான ஆட்டத்தை ஆடுவது மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ள ப்ரெட் லீ, ரிங்கு சிங் பெரிய அளவில் வருவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பர்திவ் படேல், அழுத்தமான சூழலில் ஒரே ஓவரில் ஐந்து சிக்சர்கள் அடித்தது மிகவும் சவாலான செயல் என பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.