தட்சிண கன்னடா மாவட்டம் கடபா தாலுகாவில் கனமழை கொட்டித் தீர்த்தது

156

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் கடபா தாலுகாவில் கனமழை கொட்டித் தீர்த்தது. பலத்த காற்றுடன் கொட்டித்தீர்த்த கனமழையால், சாலைகளில் மழைநீர் தேங்கியது. தொடர்ந்து இடைவிடாமல் பெய்த கனமழையால், நகரின் முக்கிய பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது. கனமழையால் சாலைகள் முழுவதும் வெள்ளத்தால் சூழப்பட்டதால், ஏராளமான வாகனங்களில் நீரில் மூழ்கியுள்ளன.

குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகள் மற்றும் கடைகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால் மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். கனமழையால்குமாரதாரா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பர்வதமுகி பகுதியில் வீட்டின் மீது சரிந்து விழுந்ததில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு குழந்தைகள் மண்ணில் சிக்கி உயிரிழந்தன. கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.