நண்பேன்டா….ஆமையின் இந்தச் செயலைப் பார்த்திருக்கிறீர்களா?

137
Advertisement

எழுந்திருக்க முடியாமல் சாய்ந்து கிடக்கும் ஆமையை
மற்றோர் ஆமை முட்டுக்கொடுத்து நிமிர்ந்து நிற்கச்செய்யும்
வீடியோ சமூக வலைத்தளவாசிகளைக் கவர்ந்து வருகிறது.

நீரிலும் நிலத்திலும் வாழ்பவை ஆமைகள். அதற்கேற்ப அதன்
உடல் அமைப்புகள் அமைந்துள்ளன. இதன் கைகால்கள் நீரிலும்
நிலத்திலும் வாழ்வதற்கேற்ற வகையில் அமைந்துள்ளன.

முன்கால்கள் துடுப்புப்போல அமைந்திருப்பதால் நீர்நிலைகளில்
எளிதில் நீந்திச்செல்கின்றன. பின்கால்களில் உள்ள விரல்கள்
சவ்வுபோன்ற அமைப்பால் இணைக்கப்பட்டுள்ளன.

Advertisement

எனினும், ஆமை புரண்டுவிட்டால் அவற்றால் சுலபமாக
எழுந்துநிற்க முடியாது. கரப்பான் பூச்சிகளுக்கும் இதே நிலைதான்.

இங்கே வீடியோவில் காணும் காட்சியில் ஒரு பெரிய
ஆமை புரண்டு கிடக்கிறது. சுயமாக எழுந்து நிற்கமுடியாமல்
சிரமப்படும் அந்த ஆமையை மற்றொரு சிறிய ஆமை
எழுந்து நிற்க உதவுகிறது.

சாய்ந்து கிடக்கும் ஆமையின் முதுகை முட்டித்தள்ளி
நிமிர்ந்து நிற்க உதவுகிறது சிறிய ஆமை. ஆமையின் இந்த உதவும்
குணம் காண்போரை வியப்பில் ஆழ்த்துகிறது.

ஆபத்து நேரத்தில் அறியலாம் அருமை நண்பரை என்பார்கள். அந்த
பழமொழியை மெய்ப்பிக்கும் வகையில் இந்த ஆமையின் செயல் அமைந்துள்ளது.