இளைஞர்களுக்காக கல்வி தொலைக்காட்சி பயிற்சி வகுப்பு நடத்த தமிழக அரசு ஏற்பாடு

280
Advertisement

மத்திய அரசு பணிகளில் காலியாக உள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்காக விண்ணப்பிக்கும் தமிழக இளைஞர்களுக்காக கல்வி தொலைக்காட்சி, இணைதளத்தில் பயிற்சி வகுப்பு நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. 

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இயக்குனர் வீரராகவ ராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தால் பல்வேறு துறைகளில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் இப்பணிக்காலியிடங்களுக்கு www.ssc.nic.in என்ற தேர்வாணையத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்காக கல்வித்தொலைக்காட்சி வாயிலாக பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது என்றும்,  இப்பயிற்சி வகுப்புகள் அனைத்தும் ‘TN Career Services Employment’ என்ற யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வப் பயிலும் வட்டங்களில் பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப்படவுள்ளதாககூறப்பட்டுள்ளது.