ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்த அம்மாநில முதல்வர் அசோக் கெலாட்,ஏழை குடும்பத்தினருக்கு ஒரு சமையல் கேஸ் சிலிண்டர் ரூ.500 என்ற மானிய விலையில், ஆண்டு ஒன்றுக்கு 12 கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்
ராஜஸ்தானில் கேஸ் சிலிண்டரின் விலை தற்போது, ரூ.1,050 ஆக உள்ள நிலையில், உஜ்வாலா திட்ட பயனாளிகள் மற்றும் வறுமை கோட்டுக்கு கீழே இருப்பவர்களுக்கு மானிய விலையிலான இந்த ரூ.500க்கு கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் நோக்கில், இன்று முதல் 500க்கு கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். அதன்படி, இந்திரா காந்தி எரிவாயு சிலிண்டர் திட்டத்தின் கீழ் சுமார் 14 லட்சம் குடும்பங்கள் பயனடைவார்கள் என்றும் ஒரு சிலிண்டருக்கு 640 ரூபாய் மானியமாக வழங்கப்படும் எனத் தெரிகிறது.