இசையமைப்பாளர் ஒருவர் தங்கத்தாலான தலைமுடிகளை
IMPLANTATION முறையில் நடவுசெய்துள்ளது சமூக வலைத்தளத்தில்
வைரலாகி வருகிறது.
மெக்ஸிகோவைச் சேர்ந்தவர் டன் சூரிக் (DAN SUR).
24 வயதாகும் பாப் இசைக்கலைஞரான இவர் தனது
இன்ஸ்டாகிராமில் இந்தப் புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார்.
வளர்ந்து வரும் இசையமைப்பாளரான இவர்
தனது தலைமுடிகளை முழுவதுமாக மழித்துவிட்டு
தங்கத்தாலான தலைமுடிகளை அறுவைச் சிகிச்சைகள்மூலம்
செயற்கையான முறையில் பொருத்தியுள்ளார்.
அத்துடன் தங்கப் பல் வரிசையையும் பொருத்தியுள்ளார்.
அதேசமயம் தன்னைப்போல் யாரும் முயற்சிசெய்து பார்க்கமாட்டார்கள்
என்று கிண்டலாகக் கூறியுள்ளார்.
தலையில் முடி அடர்த்தியாக இல்லையெனில்,
செயற்கை முறையில் நாற்றை நடவுசெய்வதுபோல
தலைமுடிகளை நடவுசெய்வது வழக்கம். பிரபலமான சினிமா
நடிகர்கள் சிலர் இந்த முறையில் தலைமுடிகளை தங்கள் அழகைக்
கூட்டிக்கொள்வது வழக்கம்.
ஆனால், இசையமைப்பாளர் ஒருவர் தங்கத்தாலான
தலைமுடிகளை IMPLANT செய்துள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது.
தங்கத் தோணியிலே தவழும் பெண்ணழகே
நீ கனவுக் கன்னிகையோ இல்லை காதல் தேவதையோ என்ற
நம்ம ஊர்ப்பாடலைக் கேட்டிருப்பாரோ உலகம் சுற்றும்
வாலிபனான இந்தப் பாப் பாடகர்?