ஊரைக் கண்காணிக்கும் ஆடு

133
Advertisement

ஆட்டின் அற்புதமான செயல் இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ட்டுவிட்டரில் பதிவிடப்பட்டுள்ள அந்த வீடியோவில், ஆடு ஒன்று ஹாலோ பிளாக் சுவரில் தாவிக்குதித்து ஏறி சுவரின் மேற்பரப்புக்குச் செல்கிறது.

பொதுவாக, இரை தேடுவதற்காக செடி, கொடி, மரக்கிளைகளின்மீது ஆடு தாவிக்குதிப்பதைப் பார்த்திருக்கிறோம். சரிவான பாறைகளின்மீது உறுதியாகப் பற்றிக்கொண்டு, அதில் முளைத்துள்ள செடிகளை இரையாக்கிக் கொள்வதையும் பார்த்திருக்கிறோம். கார், டெம்போ உள்ளிட்ட வாகனங்களில் மீதும் ஏறிச்சென்று இலைதழைகளை உண்பதைப் பார்த்துள்ளோம்.

Advertisement

அவையெல்லாம் ஆட்டின் புத்திசாலித்தனத்துக்கு சான்றுகள் என்றால், தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் ஆட்டின் செயல் அதன் உச்சமாக அமைந்துள்ளது.
செங்குத்தான சுவரின்மீது தாவிக்குதித்து ஏறி, சுவரின் மேற்பரப்புக்குச் செல்லும் ஆட்டின் செயல் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது..

ஏணி இருந்தாலே சுவரின்மீது ஏறத்தயங்கும் மனிதர்கள் மத்தியில், எவ்விதப் பயமும் தயக்கமும் இன்றி, சிறிது நேரம் யோசித்து மிகத்தைரியமாக சுவரில் ஏறுகிறது அந்த ஆடு.

பிடிமானம் எதுவும் இல்லாத நிலையில், சுவரில் இரை எதுவும் இல்லாத சுவரின்மீது ஆடு எதற்காக ஏறியது என்பது சிந்திக்க வைத்துள்ளது. ஒருவேளை ஊரைக் கண்காணிக்க ஏறியதோ?

நம்பிக்கையூட்டுகிறது ஆட்டின் செயல்.