பள்ளிக்கூடம் போகும் ஆடு

390
Advertisement

சிறுமியுடன் ஆடு ஒன்று பள்ளிக்கூடத்துக்குச் செல்லும் வீடியோ
அண்மையில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஹிமாச்சலப்பிரதேச மாநிலத்தில்தான் இந்த விநோதமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வழக்கமாக, செல்லப்பிராணிகளில் முதலிடம் வகிக்கும் நாய்தான்
தன்னுடைய எஜமானரையோ குடும்பத்தினரையோ பின்தொடர்ந்து செல்லும்.
ஆனால், ஆடு ஒன்று பள்ளிச் சிறுமியைப் பின் தொடர்ந்து செல்வது
அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது-

Advertisement

பள்ளிச்சீருடை அணிந்து புத்தகப்பையுடன் வேகமாக
நடந்துசெல்லும் அந்த சிறுமியின் பின்னால் ஆடும்
வேகமாக நடந்தும் ஓடியும் செல்கிறது.

இதனை அஜய்தா என்னும் டாக்டர் தனது ட்டுவிட்டர்
பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முழு வீடியோவும் இல்லாததால்,
ஆடு பள்ளிக் கூடத்துக்குள் சென்றுவிட்டதா என்பதை
உறுதிப்படுத்த முடியவில்லை.

எனினும், பள்ளிக்குத்தான் ஆடு செல்வதாக அந்த டாக்டர் கூறியுள்ளார்.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பள்ளிச்சிறுமிக்கு
ஒரு நல்ல தோழி கிடைத்திருக்கிறாள் என விமர்சித்துள்ளனர்.