வெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாத உணவுகள்

252
Advertisement
  1. சோடா இதில் கார்பனேட் ஆசிட் அதிகம் இருப்பதால் வெறும் வயிற்றில் சோடாவைப் பருகினால் வயிற்றிலுள்ள அமிலங்களுடன் கலந்து குமட்டல், அசௌகரியத்தை ஏற்படுத்தும்.
  2. தக்காளி தக்காளிப் பழத்திலுள்ள ஆசிட் வயிற்றிலுள்ள ஆசிட்டுடன் கலந்து கரையாத ஜெல்லை உருவாக்கி வயிற்றில் கற்களை ஏற்படுத்திவிடும்.
  3. மாத்திரைகளை எப்போதுமே வெறும் வயிற்றில் எடுக்கக்கூடாது- வெறும் வயிற்றில் மாத்திரை சாப்பிட்டால் அது வயிற்றுப் படலத்தை அரிக்கும். அத்துடன் வயிற்றிலுள்ள அமிலத்துடன் கலந்து உடலில் ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கிவிடும்.
  4. ஆல்கஹால் இதை வெறும் வயிற்றில் குடித்தால் வயிற்றுப் படலத்தில் எரிச்சலை ஏற்படுத்தும்.
  5. காரமான உணவுகளை எப்போதும் வெறும் வயிற்றில் உண்ணக்கூடாது- கடுமையான எரிச்சலைக் கார உணவுகளும் தின்பண்டங்களும் உருவாக்கிவிடும். குடல்புண் ஏற்படுவதற்கும் வழிவகுக்கும்.
  6. காபி காபி மிகவும் ஆபத்தான பானம். வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீர் பருகிய பின்பு காபியைப் பருகலாம். இதேபோல்தான் டீ யும். வயிற்றுப் படலத்தை அரித்துவிடும்.
  7. தயிரை வெறும் வயிற்றில் உண்டால் வயிற்று உப்புசம் ஏற்படும்.
  8. வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடலில் மக்னீசியம் அதிகரித்து கால்சியம், மக்னீசியத் சத்துகள் ஏற்றத்தாழ்வு ஏற்படும்.
  9. சர்க்கரை வள்ளிக் கிழங்கு தென்மாவட்டங்களில் சீனிக்கிழங்கு எனப்படும் இந்தக் கிழங்கு இரண்டு ரகமாக விளைகிறது- இந்தக் கிழங்கில் உள்ள டானின் மற்றும் பெக்டின் ஆகியவை குடல்வாலைத் தூண்டி அதிகப்படியான செரிமான அமிலத்தை சுரக்கச் செய்து நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும்.

குடலைக் கழுவி உடலை வளர் என்று சித்தர்கள் சொல்லியுள்ளனர்.
ஆனால், குடலை வலுவிழக்கக் செய்வதுடன் குடல்புண்ணையும்
ஏற்படுத்தும் இத்தகைய வழக்கத்தைக் கைவிடாவிட்டால் உடல்
வலிமை இராது. நோய்த் தொற்றுக்கும் ஆளாவோம்.

எனவே, இத்தகைய வழக்கத்தை விட்டுவிட்டு உடல் ஆரோக்கியத்தைக் காப்போம்.

Advertisement