விமானத்தில் கோளாறு – நடுவானில் மீண்டும் சென்னைக்கு திரும்பிய விமானம் !

693
Advertisement

மக்களின்  நீண்ட  தூரம்  மற்றும் விரைவாக பயணம் செய்ய மக்கள் தேர்ந்தெடுப்பது விமான பயணம்.தொழில்நுட்பம் வளர்ச்சிபெற்று வந்தாலும் , தவறுகள் சில நேரங்களில் நிகழ்வது இயல்பே.   

இந்நிலையில் சென்னையில் இருந்து துர்காபூர் நோக்கிச் சென்ற ஸ்பைஸ்ஜெட்டின் போயிங் 737 மேக்ஸ் விமானத்தின் என்ஜின்களில் ஒன்று நடுவானில் கோளாறு ஏற்பட்டதால் மீண்டும் புறப்பட்ட விமான நிலையத்திற்கே திரும்பியது.

செவ்வாய்க்கிழமை  நடந்த இந்த சம்பவம் கடந்த ஐந்து மாதங்களில் ஸ்பைஸ்ஜெட்டின் மேக்ஸ் விமானம் சம்பந்தப்பட்ட இரண்டாவது சம்பவமாகும்.

இதற்கு முன், கடந்த ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி மும்பையில் இருந்து கொல்கத்தாவுக்குப் பறந்து கொண்டிருந்த ஸ்பைஸ்ஜெட்டின் மற்றொரு 737 மேக்ஸ் விமானம், இன்ஜினில் ஏற்பட்ட “தொழில்நுட்பக் கோளாறு” காரணமாக மகாராஷ்டிராவின் தலைநகருக்குத் திரும்ப வேண்டியதாயிற்று.

2019 ,மார்ச் 10 ஆம் தேதி , நான்கு இந்தியர்கள் உட்பட 157 பேரை பலிகொண்ட எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் 737 மேக்ஸ் விமானம் விபத்துக்குள்ளான மூன்று நாட்களுக்குப் பிறகு , அனைத்து மேக்ஸ் விமானங்களும் இந்தியாவில் சிவில் ஏவியேஷன் ஜெனரல் (DGCA) மூலம் சேவை நிறுத்திவைக்கப்பட்டது.

அதன் பின் ,போயிங் நிறுவனம்  தேவையான மென்பொருள் திருத்தங்களைச் செய்த பிறகு, டிஜிசிஏ கடந்த ஆண்டு ஆகஸ்ட் 26 அன்று மேக்ஸ் விமானங்களின் வணிக விமான நடவடிக்கைகளுக்கான தடையை நீக்கியது.

அதையடுத்து  ,கடந்த ஆண்டு நவம்பரில் ஸ்பைஸ்ஜெட் தனது மேக்ஸ் விமானங்களை வணிகரீதியான விமான நடவடிக்கைகளுக்காக மீண்டும் இயக்கத் தொடங்கியது.

தகவலின் படி , சென்னையில் இருந்து பிறப்பிட்ட விமானம் நடுவானில் பயந்துகொண்டு இருந்தபோது , என்ஜின்களில் ஒன்று கோளாறு ஏற்பட்டது.இதனை கவனித்த விமானி விமானத்தை நடுவானில் மீண்டும் திரும்பி சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர் மேலும் டிஜிசிஏ விசாரணையைத் தொடங்கியுள்ளது என்று  தெரிவித்தனர்

இந்நிலையில் , அமெரிக்காவை தளமாகக் கொண்ட போயிங், இந்த விவகாரத்தில் அறிக்கையை வெளியிட பிடிஐயின் கோரிக்கைக்கு அந்நிறுவனம் தற்போதுவரை பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.