ஆம் ஆத்மி எம்பியை திருமணம் செய்யும் பிரபல பாலிவுட் நடிகை!

269
Advertisement

‘ஹசி டோ fasi’ ‘Namaste England’ மற்றும் ‘Girl on the  Train’ படங்களில் நடித்து பிரபலமானவர் பரினீதி சோப்ரா.

பிரியங்கா சோப்ராவின் ஒன்று விட்ட சகோதரியான இவர், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராகவ் சதாவை காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது.

கடந்த மாதம் இருவரும் ஒன்றாக வெளியே சென்ற புகைப்படங்கள் இணையத்தின் கவனத்தை ஈர்த்த நிலையில், இருவருக்கும் வரும் 13ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிச்சயதார்த்தத்தை முன்னிட்டு பரினீதியின் வீடு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வரும் நிலையில், அரசியல் கட்சியில் முக்கிய பிரமுகர் ஒருவரும் பாலிவுட் நடிகையும் நிச்சயதார்த்தம் செய்யும் நிகழ்வு அரசியல் மற்றும் திரை வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.